| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| சுவிஸ் வங்கி முதலீட்டில் மோசடி: முன்னாள் மேலாளர் மீது சந்தேகம் |
| [ வெள்ளிக்கிழமை, 18 சனவரி 2013, 03:29.20 பி.ப GMT ] |
வாண்ட்டோபெல் என்ற சுவிஸ் தனியார் வங்கியின் ஜெனீவா கிளையில் ஸ்பெயின் வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருந்தனர்.இப்போது ஸ்பெயின் அரசு வரி செலுத்தவேண்டாம் என்று அறிவித்ததும் இந்த ரகசிய இருப்பை வெளியே கொண்டுவர முயன்றனர். வங்கியிலிருந்து பணத்தை எடுக்க முயன்ற போது தங்கள் கணக்கிலிருந்த பணம் 60, 70 சதவீதம் குறைந்திருந்ததை அறிந்தனர்.
உடனே வங்கி இப்பிரச்னை குறித்து ஆராய்ந்ததில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தனது முன்னாள் மேலாளர் மீது சந்தேகம் தோன்றியது. அவர் மீது டிசம்பர் 24 அன்று காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அவர் இப்போது சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறி ஸ்பெயினில் தங்கியுள்ளார்.
முன்னாள் மேலாளர், தனது வங்கி வாடிக்கையாளர்களிடம் நல்ல இணக்கமான முறையில் பழகி வந்தார். அவர்களின் வங்கியிருப்பு குறித்த ஆவணங்களை அவ்வப்போது அவர்களிடம் காண்பித்ததால் எவருக்கும் இவர் மீது சந்தேகம் தோன்றவில்லை.
ஆனால் இவர் காண்பித்த ஆவணங்கள் அனைத்தும் பொய்யானவை என்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெனீவா அதிகாரி டேரியோ ஜனி, நாளிதழுக்கு அளித்த தகவலில் முன்னாள் மேலாளர் மீது புகார் கொடுக்கப்பட்டதாக மட்டும் கூறினார். வங்கியின் செய்தித் தொடர்பாளர், விசாரணை நடந்துகொண்டிருப்பதால் இவ்வழக்கு குறித்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| அண்டை மாநிலங்களில் தங்கும் ஜெனீவா பணியாளர்கள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:09.23 பி.ப ] |
ஐ.நா தொடர்பான பல்வேறு அமைப்புகள் ஜெனீவாவில் இருந்தாலும் அவற்றில் பணியாற்றும் பணியாளர்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் அண்டை மாநிலங்களில் தான் தங்கியுள்ளனர் என்பதை மாநில அரசின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. [மேலும்] | | சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 09:04.34 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் புதிதாக உருவான கிளென்கோர் எக்ஸ்ராட்டா(Glencore Xstrata) என்ற சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவராக, பழைய எக்ஸ்ட்ராட்டாவின் தலைவரான ஜான் பாண்ட்(John Bond) என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். [மேலும்] | | 102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] [ ] |
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்] | | சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்] | | ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ] |
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|