சுகாதார செய்தி
சுவிஸில் போலி மருந்துப் பொருட்களின் இறக்குமதி உயர்வடைந்துள்ளது
[ சனிக்கிழமை, 31 யூலை 2010, 06:52.30 பி.ப GMT ]
சுவிட்சர்லாந்தில் போலி மருந்துப் பொருட்களின் இறக்குமதி வெகுவாக உயர்வடைந்துள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத மருந்துப் பொருட்களின் இறக்குமதி 75 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இது ஓர் ஆபத்தான நிலைமை என சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போலியான வயகரா மாத்திரைகள் போன்றவை அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முதல் ஆறு மாத காலப்பகுதியில் சட்டவிரோதமான அல்லது சந்தேகத்திற்கு இடமான மருந்துப் பொருள் இறக்குமதிகள் தொடர்பில் 992 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

2009ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் சட்டவிரோதப் போலி மருந்துப் பொருள் இறக்குமதியின் எண்ணிக்கை கனிசமான அளவு உயர்வடைந்துள்ளது.

போலி மருந்துப் பொருட்களின் மூலம் உலக அளவில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறைந்த பட்சம் வருடமொன்றில் 50,000 போலி மருந்துப் பொருட்களேனும் நாட்டுக்குள் கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமை குறித்து சுவிஸ் சுங்கப் பிரிவினர் தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

விலை குறைந்த பொருட்களை சந்தையில் பெற்றுக் கொள்ளும் நோக்கில் சிலர் இவ்வாறான மருந்துப் பொருட்களை நாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விபரங்களுக்கு

 

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஸ்வாட்ச் நிறுவனம் புதிய தொழிற்சாலைகளை அமைக்கத் திட்டம்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஸ்நேகபூர்வ போட்டி சமநிலையில் நிறைவு
வெற்றிடமாகும் அமைச்சுப் பதவிகளுக்கான பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்
சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன
நாட்டின் தபால் வலையமைப்பை பாதுகாப்பதற்காக கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளன
காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கு நிதி திரட்டுவது குறித்து ஜெனீவாவில் பேச்சுவார்த்தை
அமெரிக்க ஓபன் மூன்றாம் சுற்றுக்கு பெடரர் முன்னேற்றம்
சுவிஸ் சட்ட வல்லுனர் ஐ.நா மனித உரிமை குழுவிற்காக மீண்டும் தெரிவு
படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர்
 
   
   
 
Switzerland Flag, Photo - flickr
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ]
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்]
சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ]
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்]
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 06:54.04 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்]
சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களின் நடவடிக்கைகளினால் சிக்கல் நிலைமை
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:55.36 பி.ப ]
சூரிச்சின் சில்குவாய் நகரில் பாலியல் தொழிலாளர்களின் நடமாட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:52.39 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]