சமூக செய்தி
சுவிஸ் வர்த்தகருக்கு லிபிய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 04:20.15 பி.ப GMT ]
சுவிட்சர்லாந்து வர்த்தகரான மெக்ஸ் கோல்டிக்கு லிபிய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டமைக்காக கோல்டிக்கு ஆயிரம் தினார் அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோல்டி லிபிய வர்த்தகச் சட்டங்களுக்கு புறம்பான வகையில் செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அபராதத் தண்டனையை சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதுடன், தண்டனை குறித்து எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஏனைய சுவிஸ் பிரஜையான ராச்சீட் ஹம்டானிக்கும் இதேவிதமான தண்டனை விதிக்கப்படக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய தினம் குறித்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மெக்ஸ் கோல்டி மற்றும் ராச்சீட் ஹம்டானி ஆகிய சுவிட்சர்லாந்து வர்த்தகர்கள் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இரண்டு வர்த்தகர்களுக்கும் ஏற்கனவே வீஸா சட்டங்களை மீறிய குற்றத்திற்காக 16 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தண்டனை தொடர்பில் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டில் ஒன்று நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய மேன்முறையீடு எதிர்வரும் 11ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுவிட்சர்லாந்தில் கடந்த வருடம் 560 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்பு
அண்டை நாடுகளுக்கு இடையில் முரண்பாடு ஏற்படுவது சாதாரணமானது : ஜெர்மன் ஜனாதிபதி
உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் வரிசையில் சுவிஸ் பல்கலைக்கழகங்களும் இடம்
ரொஜர் பெடரர் அமெரிக்க ஓபன் போட்டித் தொடரின் அரையிறுதிக்கு தகுதி
ஐரோப்பிய கிண்ண தகுதி காண் போட்டியில் இங்கிலாந்திடம் சுவிட்சர்லாந்து தோல்வி
சுவிட்சர்லாந்து மோட்டார் கார்பந்தய அணி ஜப்பான் சாரதியின் ஒப்பந்த காலம் நீடிப்பு
பல்கேரியா, ருமானியா ஆகிய நாடுகளுக்கு சுவிட்சர்லாந்து உதவிகளை வழங்கவுள்ளது
சுவிட்சர்லாந்து வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் : ஐரோப்பிய ஒன்றியம்
வாவிரின்கா முதல் தடவையாக அமெரிக்க ஓபன் காலிறுதிக்கு தகுதி
உயிரிழந்த நைஜீரிய சட்டவிரோத குடியேறியின் குடும்பத்தினருக்கு மனிதாபிமான அடிப்படையில் நிதி உதவி
 
   
   
 
Switzerland Flag, Photo - flickr
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ]
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்]
சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர்
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ]
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்]
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ]
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்]
சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ]
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்]